அபி சரவணன்
அபி சரவணன்

ஏ.ஆர்.சங்கர் பாண்டி இயக்கத்தில் GES Movies சார்பில் இளங்கோவன் லதா தயாரித்துள்ள படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளவர் நடிகர் அபி சரவணன் இத்திரைப்படம் வருகின்ற 25ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்போது இத்திரைப்படத்தின் பிரமோஷன் வேலைகள் நடைபெறுவதால் இத்திரைப்படத்தின் போஸ்டர் இன்று ஒரு தினசரி பத்திரிக்கையில் வெளியாகியுள்ளது, இதில் ஒரு நடிகரின் முகம் தெரியாமல் இருப்பதாலும் இந்த படத்தின் நாயகனின் முகத்தையும் இவரையும் எந்த விதமான நிகழ்ச்சிகளிலும் சேர்த்துக்கொள்ளாததாலும் இன்று அபி சரவணன் தனது பேஸ்புக்கில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார் அது பின்வருமாறு :-
பட்டதாரி பட விளம்பர விஷயத்தில் இத்தனை நாட்கள் என்னை ஓரங்கட்டிய போதும் அமைதியாக இருந்த நான் இன்று (22/11/16) தினத்தந்தியில் வெளியான பட்டதாரி பட விளம்பரம் கண்டு வருத்தமடைகிறேன்…
காரணம் நான் கதாநாயகனாக நடித்தும் என்னையும் மற்றொரு கதாநாயகி Raasika Dharani விளம்பரத்தில் ஒரம் கட்டப்பட்டத்திற்கு இல்லை. யாரை விளம்பரத்தில் போடலாம் என்பது தயாரிப்பாளரின் முடிவு.
#Roc B designs விளம்பர கம்பெனி நிர்வாகி அவர்களே…. வாங்கும் சம்பளத்திற்கு வேலை பாருங்கள்…உங்களை நம்பிதான் தயாரிப்பாளர் செலவு செய்கிறார்… உங்கள் விளம்பரம் பார்த்துதான் மக்கள் எங்களை போன்ற புதுமுகங்களையும் , புதுப்படங்களயையும் முடிவு செய்கிறார்கள்..
பட்டதாரி திரைப்படத்தின் போஸ்டர்
பட்டதாரி திரைப்படத்தின் போஸ்டர்

எனக்குதெரிந்து சினிமா வரலாற்றில் ஒரு திரைப்படத்தின் விளம்பரத்தில் நடிகர்களின் ஓரே புகைப்படத்தை கடைசிவரைப் பயன்படுத்திய பெருமை உங்களையே சேரும்…
உங்கள் விளம்பரத்தில் உள்ள நபரின் முகம் முழுதாக இல்லாமல் பாதி கட்டிங் செய்யப்பட்டு இருப்பது கூடவா தெரியாது? பத்திரிக்கையை உறுதியாக காரணம்கூற முடியாது…. காலம்காலமாக பல ஆயிரக்கணக்கானப் படங்களை விளம்பரபடுத்தி வரும் அவர்கள் இந்த தவறை செய்ய வாய்ப்பே இருக்க முடியாது.
நாயகி அதிதி
நாயகி அதிதி

ஆனால் படத்தயாரிப்பாளரின் சார்பாக விளம்பரம் கொடுக்க சம்பளம் வாங்கும் குழுவை சார்ந்த விளம்பர கம்பெனியில் ஒருவர் கூடவா இதை கவனிக்க வில்லை? படத்தின் முதல் designல் இருந்து வெறும் cut,paste,copy மட்டுமே உங்கள் வேலையா….??? மனதை தொட்டு கேட்டு பாருங்கள். பட்டதாரி படத்திற்கு மட்டும் எத்தனை design செய்தீர்கள் .?
இனிமலோவது உங்கள் வேலையில் யாராவது ( யாரோ )தலையிட்டால் அவர்களிடம் தெளிவாக எடுத்து சொல்லி உங்கள் வேலையில் கவனமாக இருங்கள்…
குறிப்பு.
பலமுறை சம்பந்தபட்ட அனைவரையும் தொடர்பு கொள்ள முயன்றும் முடியாததால் இங்கு பதிவிடுகிறேன். ஏற்கனவே இசை வெளீயீட்டில் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் திரு.டி. சிவா அவர்கள் பட்டதாரி பட விளம்பரம் குறித்து அதிருப்தியும் அடைந்து அறிவுரை கூறியபின்பும் கூட ஏன் அதையும் ஏற்கவில்லை?
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.