சிவசேனா தொண்டர்களால் அடித்து விரட்டப்பட்ட ‘பால்தாக்கரே’!

மும்பை,
சிவசேனா தலைவரான பால்தாக்கரேவின் வாழ்க்கை வரலாறு படமாக தயாரிக்கப்பட்டு வருகிறது. அதற்கான தொடக்க விழா நேற்று மும்பையில் கோலாகலமாக நடைபெற்றது.
இந்த விழாவில் பால்தாக்கரேவின் மகனும், சிவசேனா தலைவருமான உத்தவ் தாக்கரே, நடிகர் அமிதாப் பச்சன் உள்பட பலர் பங்கேற்றனர். அப்போது பால்தாக்கரே படத்தின் டீசர் வெளியிடப்பட்டது.
இந்த படத்தில் பால்தாக்ரேவாக நவசுதீன் சித்திக் என்பவர் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இதே நவாசுதீன் சித்திக்தான், ராம் லீலா என்ற படத்தில் மாரீசன் என்ற கேர்க்டரில் நடிக்க இருந்தார்.
அப்போது அதை அறிந்த சிவசேனா தொண்டர்கள் நவசுதீனை அடித்து விரட்டினர். தற்போது, அவர்தான் பால்தாக்கரேவாக, பால்தாக்கரேவின் வரலாற்று படத்தில் நடிக்க இருக்கிறார்.
இது சிவசேனா தொண்டர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.