பவர்ஸ்டார் இணைந்ததால் பாஜக ஆட்சி: எஸ்.வி.சேகர்

1

நடிக்கத் தெரியாத நடிகர் என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவரும், தனக்குத்தானே “பவர் ஸ்டார்” என்ற பட்டமும், ரசிகர் மன்றமும் வைத்திருப்பவரி  சீனிவாசன் என்பவர். இவர் தன்னை மருத்துவர் என்றும் அழைத்துக்கொள்கிறார்.  ஆனால் இவர்,  முறையான மருத்துவ படிப்பு படித்தவர் இல்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில்ஆந்திர மாநிலம் ஓங்கோலைச் சேர்ந்த,  ஓட்டல் அதிபர் ரங்கநாதனிடம், 50 லட்சம் ரூபாய் கடனாக வாங்கி ஏமாற்றியதாக வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.  அடுத்து, ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி தருவதாக, டெல்லியை சேர்ந்த தொழில் அதிபரிடம், ஐந்து கோடி ரூபாய் மோசடி செய்ததாக    சீனிவாசனை, டெல்லி போலீசார் கைது செய்து திகார் சிறையில் அடைத்தனர்.

மனைவியுடன் பாஜகவில் இணைகிறார் பவர் ஸ்டார
மனைவியுடன் பாஜகவில் இணைகிறார் பவர் ஸ்டார

பிறகு வெளியே வந்தவர், சில திரைப்படங்களில் நடித்தார். இவர் தற்போது மத்திய அமைச்சர் பொன்  ராதாகிருஷ்ணன் முன்னிலையில்  பா.ஜ.க.வில் சேர்ந்தார். உடன் அவரது மனைவியும் சேர்ந்தார்.

நடிகரும், பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகர், இதை வாழ்த்தி  தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் எஸ்.வி சேகர் கூறியுள்ளதாவது:”

“அனைத்து தொகுதிகளிலும்   பாஜ க வெற்றி உறுதி. தமிழகத்தின் ஒப்பற்ற தலைவன் பவர் ஸ்டார் பொன்னார் தலைமயில் கட்சியில் இணைந்தார். வாழ்த்துக்கள்” என்று தெரிவித்துள்ளார்.

“நடிகர் எஸ்.வி. சேகர், இயல்பிலேயே நகைச்சுவை உணர்வு உள்ளவர். அப்படித்தான் இந்த முகநூல் பதிவையும் எழுதியிருப்பார்” என்று அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் சொல்கின்றன.