ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் படத்தில் நாயகியாகும் பவித்ரா லட்சுமி….!

குக் வித் கோமாளி உள்பட பல்வேறு சின்னத்திரை நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமான பவித்ரா லட்சுமி ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் படத்தில் நாயகியாகிறார்.

ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் தங்களின் 21 வது படைப்பாக சதீஷ், பவித்ரா லட்சுமி நடிக்கும் படத்தை தயாரிக்கிறார்கள். வித்தியாசமான கதையம்சத்துடன் தயாராகும் இந்தப் படத்தில் ஜார்ஜ் மரியன், இசையமைப்பாளர் சங்கர் கணேஷ், லிவிங்ஸ்டன், ஞானசம்பந்தன், ஸ்ரீமன் ஆகியோரும் நடிக்கின்றனர்.

குக் வித் கோமாளி புகழ் பவித்ரா லட்சுமி நாயகியாகும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

பல குறும்படங்களை இயக்கியவரும், யார்க்கர் ஃபிலிம்ஸ் என்ற யூடியூப் சேனலை நடத்தி வருகிறவருமான கிஷோர் ராஜ்குமார் இந்தப் படத்தின் கதை, திரைக்கதை, வசனங்கள் எழுதி இயக்குநராக அறிமுகமாகிறார்.