‘அய்யப்பனும் கோஷியும்’ தெலுங்கு ரீமேக்கில் பவன் கல்யாண் ஒப்பந்தம்….!

‘அய்யப்பனும் கோஷியும்’ தெலுங்கு ரீமேக்கில், பிரித்விராஜ் கதாபாத்திரத்தில் நடிக்க பவன் கல்யாண் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

பிஜு மேனன் நடித்த போலீஸ் கதாபாத்திரத்தில் பவன் கல்யாண் நடிக்கவுள்ளதை தயாரிப்பு நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. ‘அய்யப்பனும் கோஷியும்’ தெலுங்கு ரீமேக்கினை சாகர் கே. சந்திரா இயக்கவுள்ளார்.

ஒளிப்பதிவாளராக பிரசாத் முரேலா, இசையமைப்பாளராக தமன், எடிட்டராக நவீன் ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.