அமிதாப் பச்சன், தாப்ஸி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘பிங்க்’. ‘பிங்க்’ படத்தின் தென்னிந்திய மொழிகளின் ரீமேக் உரிமையை பெரும் விலை கொடுத்து வாங்கினார் போனிகபூர்.

தமிழில் ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்க ‘நேர்கொண்ட பார்வை’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றது.

தமிழ் ரீமேக்கைத் தொடர்ந்து தெலுங்கு ரீமேக் பேச்சுவார்த்தை, தற்போது முடிவாகியுள்ளது. அரசியலுக்காகத் திரையுலகிலிருந்து விலகியிருந்த பவன் கல்யாண், இதில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார் .

இந்தப் படத்தை போனி கபூர் மற்றும் தில் ராஜூ இணைந்து தயாரிக்கவுள்ளனர். ஸ்ரீராம் வேணு இயக்கவுள்ளார்.