டி.வி. லைவ்வில் அதிர்ச்சி! ரகளையில் ஈடுபட்ட ரசிகர்கள்!

மிழில் நடிகர் அஜீத் நடித்து வெற்றிகரமாக ஓடிய “வீரம்” படம், “கட்டமராயுடு” என்ற பெயரில் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டது.

ஆந்திர சூப்பர் ஸ்டார் பவண்கல்யான் நடித்தார்.

பெரும் எதிர்பார்ப்புடன் சமீபத்தில் இந்தத் திரைப்படம் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் வெளியானது.

இத் திரைப்படத்தை மகேஷ் என்பவர் பேஸ்புக்கில் கடுமையாக விமர்சித்தார்.  அவர், “கட்டம ராயுடு படம் மிக மோசமான கதையம்சம் கொண்ட திரைப்படம். படம் முழுக்க பவன் கல்யாணின்  விதவிதமான தோற்றங்களில் ஸ்டைலாக வருகிறார். மற்ற கதாபாத்திரங்கள் எல்லாம் கவுரவ தோற்றம்போலவே வந்துபோகிறார்கள். இந்த படம் பவன் கல்யாண் ரசிகர்களுக்கானது மட்டுமே. மற்றவர்கள் இந்த படத்தை பார்க்க வேண்டாம்” என்று பதிவிட்டிருந்தார்.

இதனால் பவன்கல்யாண் ரசிகர்கள் ஆத்திரமடைந்து, அவரின் முகநூல் பக்கத்தில் ஆபாசமாகவும் அருவெறுப்பான வார்த்தைகளிலும் பின்னூட்டமிட்டு வருகிறார்கள். அதோடு, மகேஷ் குறித்து மீம்ஸ்களையும் பரப்பி வருகிறார்கள்.

அதோடு, “பவன் கல்யாண் ரசிகர்கள் அனைவரிடமும் உன் செல்போன் எண் இருக்கிறது. உன் வீட்டு முகவரியும் உள்ளது. உன் எலும்பை முறிப்போம்” என்று கொலை மிரட்டல் விடுத்து வருகிறார்கள்.

ஆனால் இது குறித்தெல்லாம் கவலைப்படாத மகேஷ், “ என் கருத்தை பதிவு செய்ய எனக்கு முழு உரிமை உண்டு. இந்த மிரட்டல்களுக்கு பயப்பட மாட்டேன்.” என்று தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், “கட்டமராயுடு” படத்தை கடுமையாக விமர்சித்த டிவி நிகழ்ச்சியில் ரகளை செய்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்கள் பவன்கல்யாண் ரசிகர்கள்.

 

Leave a Reply

Your email address will not be published.