டில்லி

ரசு ஊழியர்களுக்கு 7ஆவது ஊதிய ஆணையம் பரிந்துரைத்த ஊதிய உயர்வு தற்போது நிகழ்ந்துள்ள வங்கி ஊழலினால் மேலும் தள்ளிப் போகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

7ஆவது ஊதிய ஆணையத்தின் படி சுமார் 50 லட்சம் அரசு ஊழியர்கள் ஊதிய உயர்வை எதிர் நோக்கி உள்ளனர்.  அரசு குறைந்த மாத பட்ச ஊதியமான ரூ. 7000 ஐ ரூ. 18000ஆக உயர்த்த ஒப்புதல் அளித்துள்ளது.  அதாவது 2.57 மடங்கு ஊதிய உயர்வை ஒப்புக் கொண்டுள்ளது.

ஆனால் ஊழியர்கள் 3.68 மடங்கு ஊதிய உயர்வை கோரி உள்ளனர்.   அதாவது ரூ. 26000 குறைந்த பட்ச ஊதியத்தை கோருகின்றனர்.    அரசு இறுதியாக ஊதியத்தை 3 மடங்கு உயர்த்தி ரூ. 21000 குறைந்த பட்ச ஊதியமாக வழங்கப்போவதாக செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் வங்கிகளில் ஊழல்கள் நடந்துள்ளது வெளியாகி உள்ளது.   இதன் மூலம் அரசாங்கத்துக்கு இழப்பு ஏற்படும் என கணக்கிடப் பட்டுள்ளது.   இதனால் அரசு ஊழியர்களின் ஊதிய உயர்வு வழங்குவது தள்ளிப் போகும் என கூறப்படுகிறது.