தேவர் ஜெயந்திக்கு அஞ்சலி செலுத்த வருபவர்கள் வாடகை வாகனங்களில் வரக்கூடாது: ராமநாதபுரம் ஆட்சியர் வீரராகவராவ்

ராமநாதபுரம்: பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்திக்கு அஞ்சலி செலுத்த வருபவர்கள் வாடகை வாகனங்களில் வரக்கூடாது என்று ராமநாதபுரம் ஆட்சியர் வீரராகவராவ் தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடம் இருக்கிறது. வரும் அக்டோபர் 30ம் தேதி ஜெயந்தி விழாவும், குருபூஜை விழாவும் கொண்டாடப்படுகிறது.

ஏராளமானவர்கள் கலந்து கொள்ளும் விழாவில் இந்தாண்டு கொரானோ காரணமாக விழா கட்டுப்பாடுகளுடன் நடத்தப்படுகிறது. பொதுமக்களின் பாதுகாப்பு குறித்து ராமநாதபுரம் டிஐஜி  மயில்வாகனன், எஸ்பி கார்த்திக்  உள்ளிட்ட அதிகாரிகள் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு நடத்தினர்.

இந் நிலையில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்திக்கு அஞ்சலி செலுத்த வருபவர்கள் வாடகை வாகனங்களில் வரக்கூடாது என்று ராமநாதபுரம் ஆட்சியர் வீரராகவராவ் தெரிவித்துள்ளார். அஞ்சலி செலுத்தும் அரசியல் பிரபலங்கள் 26ம் தேதிக்குள் அனுமதி பெற வேண்டும் என்றும், 144 அமலில் இருப்பதால் கூட்டமாக வரக்கூடாது என்றும் கூறி உள்ளார்.