டில்லி,

ச்ச நீதிமன்றம்,  உயர்நீதி மன்ற நீதிபதிகளுக்கான சம்பள உயர்வு குறித்த மசோதா இந்த கூட்டத்தொடரின் போது நாடாளு மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

ஏற்கனவே நாடாளுமன்ற மக்கவையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், இன்று ராஜ்ய சபையிலும் நிறைவேறியது.

இதன்படி உச்சநீதி மன்றம், உயர்நீதி மன்றம் நீதிபதிகளின் சம்பளம் வரலாறு காணாத அளவுக்கு உயர்கிறது.

சமீபத்தில் 7வது சம்பள கமிஷன் அடிப்படையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்பட்டது. அதையொட்டியே பல மாநிலங்களில் மாநில அரசு ஊழியர்களுக்கும் சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நீதிபதிகளின் சம்பள உயர்வு குறித்து விவாதம் தொடங்கியது. இதையடுத்து, உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளின் சம்பளத்தை உயர்த்த வேண்டும்’ என, உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி, டி.எஸ்.தாக்குர், மத்திய அரசுக்கு கடிதம் எழுதி இருந்தார்.

அதைத்தொடர்ந்து கடந்த ஆண்டு டிசம்பர் 22ந்தேதி பாராளுமன்றத்தில், நீதிபதிகளின் சம்பள உயர்வு குறித்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மசோதா மக்களவையில் நிறைவேறிய நிலையில், இன்று மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Lok Sabha passes bill to hike salaries of judges. CJI- From ₹1 lac- ₹2.80 lacs SC judges & chief justices of HCs- ₹90k- ₹2.5 lacs HC judges- ₹80k- ₹2.25 lacs.

இதன்படி உச்சநீதி மன்றம், உயர்நீதி மன்ற நீதிபதிகளின் சம்பளம் பெருமளவு உயர்த்தப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் மாத சம்பளம் 1 லட்சத்தில் இருந்து , 2.80 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படுகிறது. மற்ற உச்சநீதி மன்ற நீதிபதிகளின் சம்பளம் 90 ஆயிரத்தில் இருந்து 2.50 லட்சமாக உயர்த்தப்படுகிறது.

உயர் நீதிமன்ற நீதிபதிகளின் சம்பளம், 80 ஆயிரம் ரூபாயில் இருந்து, 2.25 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படுகிறது.