பாயல் கோஷ் புகாரின் பேரில் அனுராக் காஷ்யப் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு….!

2014-ம் ஆண்டு தன் முன் ஆடைகளைக் களைந்து நின்றதாகவும், பாலியல் ரீதியாகத் துன்புறுத்த முயன்றதாகவும் முன்னணி இயக்குநர் அனுராக் காஷ்யப் மீது, பாயல் கோஷ் மீடூ குற்றச்சாட்டை முன்வைத்தார்.

இதனைத் தொடர்ந்து இயக்குநர் அனுராக் காஷ்யப்புக்கு ஆதரவாகவும், எதிராகவும் பலரும் கருத்துத் தெரிவித்து வருகிறார்கள்.

இதனை தொடர்ந்து “பாலியல் பலாத்காரம், முறையின்றிக் கட்டுப்படுத்தி வைத்தல், சிறைபிடித்து வைத்தல் மற்றும் பெண்ணின் கண்ணியத்துக்குக் கேடு விளைவித்தல் ஆகிய குற்றங்களின் அடிப்படையில், இந்திய தண்டனை சட்டம் 376(1), 354, 341, 342 ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றவாளிக்கு எதிராக முதல் தகவலறிக்கை பதிவு செய்யப்பட்டுவிட்டது” என்று பாயல் கோஷின் வழக்கறிஞர் நிதி சட்புதே ட்வீட் செய்துள்ளார்.