என்.டி.ஆர். படத்தில் ஜெயப்பிரதாவாக நடிக்கும் ஹன்சிகா

என்.டி.ஆர். வாழ்க்கையை மையப்படுத்தி உருவகும் திரைப்படத்தில் ஜெயப்பிரதா வேடத்தில் நடிகை ஹன்சிகா நடிக்க இருக்கிறார்.

முன்னாள் ஆந்திர முதல்வருன், பிரபல நடிகருமான மறைந்த என்.டி.ஆர். வாழக்கையை மையப்படுத்தி கிரிஷ் இயக்கில் திரைப்படம் உருவாகி வருகிறது. இதில் என்.டி.ஆர்.ஆக அவரது மகன் பாலகிருஷ்ணா நடிக்கிறார். என்.டி.ஆரின் மனைவியாக இந்தி நடிகை வித்யா பாலன் நடித்து வருகிறார்.

biopic

மேலும் இந்தப் படத்தில் முரளி சர்மா, பிரசாத் ரவுல், நாக சைதன்யா, மகேஷ் பாபு, ராணா டகுபதி, மோகன் பாபு மஞ்சு, ராஜசேகர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். என்.டி.ஆரின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்டதால், அவருடன் நடித்த நடிகைகளின் கதாபாத்திரங்களும் இந்தப் படத்தில் இடம்பெறுகிறது. ஸ்ரீதேவி வேடத்தில் ரகுல் பிரீத்தி சிங் நடிக்க, சாவித்திரி வேடத்தில் நித்யா மேனன் நடிக்கிறார்.

ஜெயசுதா வேடத்தில் பாயல் ராஜ்புத் நடிக்க, ஜெயப்பிரதா வேடத்தில் தமன்னா நடிக்க இருப்பதாகச் செய்திகள் வெளியாகின. ஆனால், இப்போது ஜெயப்பிரதா வேடத்தில் நடிக்க ஹன்சிகா ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்தப் படத்தின் முதல் பாகம் ஜனவரி 9-ம் தேதி வெளியாகிறது.

கார்ட்டூன் கேலரி