கமல் படத்தில் நடனம் ஆடுகிறேனா..? நடிகை பாயல் ராஜ்புத் விளக்கம்..

ங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்க உருவாகிறது இந்தியன் 2ம் பாகம். அதிக பொருட்செலவில் உருவாகும் இப்படம் கொரோனா ஊரடங்கிறகு பிறகு மீண்டும் தொடங்க உள்ளது.
இதில் கமலுடன் காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், விவேக் என பல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.இப்படத்தில் சிறப்பு பாட லுக்கு பாயல் ராஜ்புத் நடனம் ஆடவிருப்பதாக தகவல் வெளிவந்துக் கொண்டிருக்கிறது. பாயல் ராஜ்புத் தெலுங்கில் ஆர் எக்ஸ் 100 படத்தில் நடனம்  ஆடியவர்.


இது குறித்து தனது இணைய தள பக்கத்தில் விளக்கம் அளித்திருக்கிறார் பாயல். அவர் கூறும்போது,’கமல்ஹாசனனின் இந்தியன் 2ம் பாகம் படத்தில் நான் நடனம் ஆடவிருப்பதாக தகவல்கள் வந்துக்கொண்டிருக்கின்றன. அப்படி நடனம் ஆடக்கேட்டு யாரும் என்னை அணுகவில்லை. எங்கிருந்து இதுபோன்ற தகவல்கள் பரவுகிறது என்று தெரியவில் லை. இப்படி எத்தனை வதந்திகள் பரவுகிறது என்று கடவுளுக்குத்தான் தெரியும். எந்த படத்துக்கும் இதுவரை நான் கால்ஷீட் தரவில்லை. இப்போது படப் பிடிப்பு எதுவும் இல்லாமல் வீட்டில் கூலாக பொழுதை கழித்து வருகிறேன்’ என்றார்.