ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு: ப.சி.யை கைது செய்ய ஆகஸ்டு 2ந்தேதி வரை தடை நீட்டிப்பு

டில்லி:

ப.சிதம்பரம் மீதான  ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் இன்றைய விசாரணையை தொடர்ந்து வழக்கை ஆகஸ்டு 2ந்தேதி டில்லி உயர்நீதி மன்றம் ஒத்தி வைத்துள்ளது. அதுவரை  முன்னாள் மத்திய அமைச்சர்  ப.சிதம்பரத்தை சி.பி.ஐ. கைது செய்ய விதிக்கப்பட்டுள்ள  தடை உத்தரவு நீடிக்கும் என்றும் அறிவித்து உள்ளது.

ஏற்கனவே நடைபெற்ற விசாரணையின்போது, விசாரணையை ஜூலை 3ந்தேதிக்கு ஒத்தி வைத்த டில்லி உயர்நீதி மன்றம், அதுவரை ப.சிதம்பரத்தை கைது செய்ய தடை விதிப்பதாக கூறியிருந்தது.

இந்த நிலையில், இன்றைய விசாரணையின்போது, ப.சி. மீதான தடை ஆகஸ்டு 2ந்தேதி அடுத்த விசாரணை வரை  தொடரும் என்று டில்லி உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது.

ஏற்கனவே டில்லி பாட்டியாலா கோர்ட்டு ஜூலை 5ந்தேதி வரை சிதம்பரத்தை கைது செய்ய  தடை உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், தற்போது  டில்லி உயர்நீதி மன்றம் ஆகஸ்டு 1ந்தேதி வரை தடை உத்தரவை நீட்டித்துள்ளது.

த்திய நிதி  அமைச்சராக தமிழகத்தை சேர்ந்த ப.சிதம்பரம் இருந்தபோது, மாறன் சகோதரர்க ளுக்கு ஆதரவாக  ஏர்செல் நிறுவனப் பங்குகளை விற்பனை செய்ததில், ப.சிதம்பரத்தின் மகன்  நிறுவனமான அட்வான்டேஜ் கன்சல்டிங் நிறுவனம் ஆதாயம் அடைந்ததாகவும், இதற்கு சிதம்பரம் உடந்தையாக இருந்ததாகவும்  சிபிஐ தரப்பில் குற்றம் சாட்டபபட்டது.

இந்த விவகாரத்தில், விசாரணைக்கு நேரில் ஆஜராக சிபிஐ தரப்பில் இருந்து  ப.சி.க்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இதை எதிர்த்து, ப.சி. சார்பில் டில்லி உயர்நீதி மன்றத்தி முன்ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில்  கடந்த மே 31ந்தேதி நடைபெற்ற விசாரணையின்போது   சிதம்பரத்தை  ஜூலை 3-ம் தேதி வரை  கைது செய்ய இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது.

இந்த நிலையில் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இன்றைய விசாரணையை தொடர்ந்து  ப.சிதம்பரத்தை கைது செய்ய ஆகஸ்டு 2ந்தேதி தடையை நீட்டித்து டில்லி உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது.

அடுத்த விசாரணை ஆகஸ்டு 2ந்தேதி நடைபெறும் என்றும் அறிவித்து உள்ளது.

You may have missed