‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தைத் தொடர்ந்து ‘ஜோஷ்வா’ எனும் படத்தை இயக்கி வருகிறார் கெளதம் மேனன்.

தற்போது அமேசான் நிறுவனத்துக்கு 2 வெப் சீரிஸ் இயக்கவுள்ளதாக கெளதம் மேனன் கூறியுள்ளார் .

இந்நிலையில் அமேசான் நிறுவனத்துக்காக கெளதம் மேனன் இயக்கும் வெப் சீரிஸ் ஒன்றுக்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்யவுள்ளார்.

கெளதம் மேனன் – பி.சி.ஸ்ரீராம் கூட்டணி முதன் முறையாக இணைந்து பணிபுரியவுள்ளது. அதேபோல், பி.சி.ஸ்ரீராமும் முதன் முறையாக வெப் சீரிஸுக்கு ஒளிப்பதிவு செய்யவிருப்பது குறிப்பிடத்தக்கது.