Random image

காஷ்மீர் உள்ளாட்சி தேர்தல் புறக்கணிப்பு…மெகபூபா முப்தி அறிவிப்பு

ஸ்ரீநகர்:

காஷ்மீர் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிப்போம் என்று முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி அறிவித்துள்ளார்.

காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சி அமலில் உள்ளது. இங்கு விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடக்கவுள்ளது. காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ய வலியுறுத்தி தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை உச்சநீதிமன்றம் அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைத்துள்ளது. இந்நிலையில் மக்கள் ஜனநாயக கட்சி காஷ்மீர் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்கிறது என மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார்.

அக்கட்சியின் ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது. கூட்டத்துக்குப்பின் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி கூறுகையில்,‘‘மாநிலத்தில் தற்போது நிலவும் சூழல் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கு உகந்ததாக இல்லை.

இந்த தேர்தலுக்காக மாநில சிறப்ப அந்தஸ்து வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இது சிறப்பு அந்தஸ்து மீதான தாக்குதலாக இருக்கலாம் என மக்களுக்கு மிகுந்த அச்சம் ஏற்பட்டுள்ள’’ என்றார். தாகவும் அவர் கூறினார்.