காஷ்மீர் உள்ளாட்சி தேர்தல்: மக்கள் ஜனநாயக கட்சி புறக்கணிப்பு! மெகபூபா
ஸ்ரீநகர்:
காஷ்மீர் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிப்பதாக மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெகபூபா முப்தி அறிவித்து உள்ளார்.
கடந்த ஜூன் மாதம் காஷ்மீரில் மாநில மெகபூபா கட்சி பாஜ கூட்டணி ஆட்சி கவிழ்ந்து, பாஜக ஆதரவை விலக்கி கொண்டதால் மெகபூபா அமைச்சரவை பதவி விலகிய நிலையில், தற்போது, காஷ்மீர் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிப்பதாக மக்கள் ஜனநாயக கட்சி அறிவித்து உள்ளது,.
ஏற்கனவே 2011-ம் ஆண்டு ஏப்ரல்-மே மாதத்தில் உள்ளாட்சி தேர்தல்கள் நடைபெற்ற நிலையில் 7 ஆணடுகள் கழித்து தற்போது உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த 2016ம் ஆண்டே நடைபெற வேண்டிய தேர்தல், மாநிலத்தில் நடைபெற்று வரும் சம்பவங்களால் தள்ளிப்போனது.
தற்போது ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பெரும்பாலான பகுதிகளில் அமைதி நிலவில் சூழல் அக்டோபர் 1ந்தேதி முதல் 5ந்தேதி தேதிவரை நகராட்சி தேர்தல்களும், நவம்பர் 8 ந்தேதி முதல் பஞ்சாயத்து தேர்தல்களும் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டு உளளது.
இதற்கிடையில், காஷ்மீர் மாநிலத்தை இந்தியாவில் இருந்து பிரித்து தனிநாடாக அறிவிக்க வேண்டும் என அங்கு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பிரிவினைவாதிகள் உள்ளாட்சி தேர்தல்களை புறக்கணிக்குமாறு வலியுறுத்தி வருகின்றனர்.
அவர்களுக்கு ஆதரவாக தேசிய மாநாட்டு கட்சியின் நிறுவனர் பரூக் அப்துல்லாவும் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளார்.
இந்த நிலையில், முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவருமான மெகபூபா முப்தியும் உள்ளாட்சி தேர்தல்களை புறக்கணிப்பதாக இன்று அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, அக்கட்சியின் சார்பில் இயற்றப்பட்ட தீர்மானத்தை அவர் ஊடகங்களுக்கு செய்திக்குறிப்பாக அனுப்பி உள்ளார்.
அதில், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்துக்கு எதிரான வழக்கு மற்றும் பிரவினைவாதிகளின் மிரட்டல் காரணமாக தேர்லை புறக்கணிப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.