மயில் “உறவு: காட்சி

ஜெய்ப்பூர்:

“மயில் உறவு கொள்வதில்லை. ஆண் மயிலின் கண்ணீரை பருகியே பெண் மயில் கர்ப்பம் தரிக்கிறது” என்று ராஜஸ்தான் உயர் நீதி மன்ற நீதிபதி மகேஷ் சந்திர சர்மா தெரிவித்துள்ள கருத்து  அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்தில் இவர் செய்தியாளர்களிடம் பேசும்போது தெரிவித்ததாவது:

“ஆண் மயில்,தீவிர பிரம்மச்சர்யத்தை பின்பற்றும்.  அது தன் இணையுடன் உறவு கொள்வதே இல்லை. ஆண் மயிலின் கண்ணீரைப் பருகியே பெண் மயில் கர்ப்பம் தரிக்கிறது.

இதனால்தான் மயில் புனிதத் தன்மை பெறுகிறது. ஆகவேதான் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் மயிலிறகை தனது தலையில் சூடிக்கொண்டிருக்கிறார். மயில் தேசியப் பறவையாக இருப்பதும் இந்த புதினதத் தன்மையால்தான்.

இதே போல பசுவுக்கும் பல தெய்வீக குணங்கள் இருக்கின்றன. அதனால் பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும்” என்று மகேஷ் சந்திர சர்மா தெரிவித்தார்.

மகேஷ் சந்திர சர்மா

இவர்தான், “அவர் பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும்” என்று மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தவர். தவிர, பசுவை கொல்பவர்களுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை என்பதை ஆயுள் தண்டனையாக மாற்ற வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கியவரும் இவர்தான்.

தான் பணி ஓய்வு பெறும் கடைசி நாளில் அவர் இத்தகைய தீர்ப்பை வழங்கினார்.

நீண்ட காலம் நீதிபதியாக பணியாற்றி ஓய்வு பெறும் ஒருவருக்கு கு மயில் எப்படி கர்ப்பம் தரிக்கிறது என்ற அடிப்படை அறிவியல்  அறிவு கூட இல்லையே என்று   சமூக வலைதளங்களில் பலரும் தங்கள் ஆதங்கத்தைத் தெரிவித்து வருகிறார்கள்.