நோயாளியை ஏற்றி வந்த ஆம்புலன்ஸ் சாலையை கடந்தவர் மீது மோதியது : இருவரும் உயிர் இழந்த சோகம்..

 

சேலம் :

சேலம் மாவட்டம் எளம்பிள்ளையை சேர்ந்த குமரேசன் என்பவர் கொரோனா காரணமாக பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் 10 நாட்களுக்கு முன்னர் அனுமதிக்கப்பட்டார்.

குணம் அடைந்ததால் சனிக்கிழமை குமரேசன் ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டார். உடனடியாக அவர் பெங்களூரூவில் இருந்து தனியார் ஆம்புலன்ஸ் மூலம் வீடு திரும்பி கொண்டிருந்தார்.

அந்த ஆம்புலன்ஸ் பெங்களூரூவை தாண்டி ஓசூர் அருகே வந்தபோது முனியப்பன் என்பவர் சாலையை கடந்துள்ளார்.

ஓட்டுநர் பிரேக் போட முயற்சித்தும், ஆம்புலன்ஸ் அவரது கட்டுப்பாட்டை இழந்து மாரியப்பன் மீது மோதியது. சம்பவ இடத்திலேயே அவர் உயிர் இழந்தார்.

ஆம்புலன்சில் வந்த கொரோனா நோயாளி, குமரேசனுக்கு இந்த விபத்தை பார்த்ததும் மாரடைப்பு ஏற்பட்டது.

நெஞ்சு வலியால் துடித்த அவரை சேலம் கொண்டு சென்று அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
ஆனால் சிகிச்சை பலனின்றி குமரேசன் இறந்து போனார்.

கொரோனாவில் இருந்து மீண்டு வந்தவர், விபத்தை பார்த்த அதிர்ச்சியில் உயிர் இழந்த சம்பவம் அவரது ஊரில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

– பா. பாரதி