அளந்து நடக்கலாம்.. நடையை அளக்கலாம்!

அருணகிரி

நெட்டிசன்:

அருணகிரி (Arunagiri Sankarankovil) அவர்களின் முகநூல் பதிவு:

ம்பி சங்கரசுப்பு இராமகிருஷ்ணனிடம் பேசிக்கொண்டு இருந்தேன்.
“தம்பி, நீங்கள் நடக்கின்றீர்களா?” என்று கேட்டேன்.
உடனே அவர் தன் அலைபேசியை எடுத்துக் காண்பித்தார்.
“அண்ணா,கடந்த ஒரு மாதத்தில் நான் நடந்த கணக்கு இது” என்றவர்,  ஒரு செயலியை   என்னுடைய அலைபேசியில் பதிவு இறக்கம் செய்து கொடுத்தார்.

கடந்த ஒரு வாரமாக நான் எடுத்து வைக்கின்ற ஒவ்வொரு அடியையும் அது கணக்குப் போட்டுச் சொல்லுகிறது.
20 மார்ச் 3968 தப்படிகள் 2777 மீட்டர்
21 மார்ச் 4406 / 3084
22 / 4133 / 2893
23 / 6809 /4766
24 / 5436 / 3805
25 / 4049 / 2834
நேற்று இயக்க மறந்து விட்டேன்
27 / 4718 /3302

இனி ஒவ்வொரு அடியையும் அளந்து நடப்பேன்.
நடையில் மட்டும் அல்ல
வாழ்க்கையிலும் அப்படித்தான்!

பொடோ மீட்டர்

சரி, இப்படி நடையை அளப்பதால் என்ன பலன் என்கிறீர்களா?

இந்த செயலி, நாம் நடக்கும் தூரத்தை மட்டும் அளந்துசொல்வதில்லை. அதோடு, நடப்பதால் நமது உடலில் எத்தனை கலோரி குறைந்திருக்கிறது என்பதையும் உடனுக்குடன் காண்பிக்கிறது!

இதனால் உற்சாகத்துடன் மேலும், நடக்கலாம் அல்லவா?

தவிர, நமது கலோரி அளவுகளுக்காக மருத்துவரை அணுக வேண்டியதில்லை.

இன்னொரு விசயம்.

“கொடி வழி” என்ற எனது நூலில், (மனிதர்களின் பரம்பரை பற்றிய நூல்) இந்த கலோரி குறித்தும் எழுதியிருக்கிறேன்.

எந்தெந்த வேலை செய்பவர், எத்தனை கலோரி கொண்ட உணவை உண்ண வேண்டும்.. எந்த உணவுப் பொருளில் எத்தனை கலோரி உள்ளது என்பதையெல்லாம் அதில் குறிப்பிட்டிருப்பேன்.

இந்த “நடை செயலி” வந்த பிறகு, அந்த கலோரி உணவு முறையில் கூடுதல் கவனம் செலுத்துகிறேன். ஆகவே,  உணவுப் பழக்கம் இன்னும் முறைப்படுத்தப்படுகிறது

நீங்களும் இந்த நடை செயலி (பொடோ மீட்டர்)யை பதிவிறக்கம் செய்து பயன்படுத்துங்களேன்!

 

Leave a Reply

Your email address will not be published.