ந்த ஆண்டு மே மாதம் வாட்ஸ்அப் ல் உள்ள தகவல்களை ஒற்றறியும்  பெகாசஸ் என்ற பெயர் கொண்டசெயலி  கண்டறியப்பட்டது.

இந்த செயலி நம் திறன்பேசியில் நிறுவப்பட்டுவிட்டால்  நாம் செல்பேசியில் உள்ள அத்தனைத தகவல்களையும் எளிதாக ஹேக்கர்கள் பெற்றுவிடுவார்கள்.

இந்த ஒற்றறியும் செயிலியை .NSO குழு என்ற இஸ்ரேலிய நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு அரசு சார்ந்த நிறுவனங்களுக்கு மட்டுமே விற்பனை செய்யப்படும் என்று கூறகிறது. ஆனால்  இதை தவறாகப் பயன்படுத்தப்படும் சம்பவங்களும் நடை பெற வாய்ப்புள்ளது.

இதில் கொடுமை என்னவெனில்  என்பது வெகுஜன கண்காணிப்பிற்கு பயன்படுத்தக்கூடிய சக்திவாய்ந்த  செயலியாக இது உள்ளது. பைனான்சியல் டைம்ஸின் அறிக்கை ஒன்று தற்போது பெகாசஸின் புதுப்பிக்கப்பட்ட பதிப்பு வெளியிடப்பட்டதாக தெரிவித்துஉள்ளது.

அது  பிரபல நிறுவனங்களான Google, Facebook, Microsoft, அமேசான் மற்றும் ஆப்பிள் iCloud போன்ற சேவையகங்களில் சேமிக்கப்படும் உங்கள் தரவை ஒற்றறியவும் முடியும் என்று கூறுகிறது.

தொழில்நுட்பம் எப்போதுமே கள்ளன் பெரிசா காப்பான் பெரிசா என்றே இயங்கிவருகிறது. காப்பான் பெரிதாக இருக்கவே அனைவருக்கும் ஆவல்

-செல்வமுரளி