வீட்டிலிருந்தபடியே வில்வித்தைப் போட்டி – அரையிறுதிக்கு முன்னேறிய அமெரிக்க வீராங்கனை!

துபாய்: கொரோனா நெருக்கடிக்கு மத்தியில், தற்போது நடைபெற்றுவரும் ‘ரிமோட்’ வில்வித்தைப் போட்டியில், அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார் அமெரிக்க வீராங்கனை பெய்ஜ் பியர்ஸ்.

இந்தப் போட்டியில், உலகின் முன்னணியிலுள்ள 8 வீரர் – வீராங்கனைகள் மட்டுமே பங்கேற்கின்றனர். இத்தொடரின் காலிறுதிப் போட்டி நடைபெற்றது.

இதில், உலக சாம்பியன்ஷிப் தொடரில் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்த அமெரிக்காவின் பெய்ஜ் பியர்ஸ், மெக்சிகோ நாட்டின் லிண்டா என்ற வீராங்கனையை சந்தித்தார்.

இந்த அரையிறுதிப் போட்டியில், தனது சமையலறையில் நின்றுகொண்டு, வேறொரு இடத்தில் வைக்கப்பட்ட இலக்கைக் குறிபார்த்து அம்பை எய்தார் பியர்ஸ். இறுதியில், இப்போட்டியில் 145-142 என்ற கணக்கில் வென்று அரையிறுதிக்குள் நுழைந்தார்.

“வீட்டிலிருந்தபடியே வில்வித்தைப் போட்டியில் பங்கேற்றது வித்தியாசமான அனுபவமாக இருந்தது” என்றார் பியர்ஸ்.