வெளியானது யோகி பாபுவின் ‘பேய் மாமா’ இரண்டாம் லுக் போஸ்டர்….!

ஷக்தி சிதம்பரம் இயக்கத்தில் யோகி பாபு நாயகனாக நடிக்க ரேஷ்மா, ரமேஷ் கண்ணா, இமான் அண்ணாச்சி, வையாபுரி உள்ளிட்ட பலர் யோகி பாபுவுடன் நடித்துள்ள படம் ‘பேய் மாமா’.

இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு, படக்குழுவினருக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

‘பேய் மாமா’ படத்தின் ஒட்டுமொத்தப் படப்பிடிப்பையும் குமுளியில் படமாக்கி முடித்துள்ளார் ஷக்தி சிதம்பரம்.

தர்மபிரபு’ படத்துக்குப் பிறகு யோகி பாபு நாயகனாக நடித்துள்ள படம் இதுவாகும்.

இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் லுக் போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது. உடல் முழுக்க மாஸ்க் அணிந்தபடி உள்ளார் யோகிபாபு. போஸ்டறில் மாஸ் ஹீரோ என்று எழுதி, மாஸ்க் ஹீரோ என்று திருத்தப்பட்டுள்ளது.