மும்பை:

மும்பையில் மாணவர்கள் மத்தியில் பேனா சிகரெட் மோகம் வேகமாக பரவி வருவது சமூகஆர்வலர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இங்குள்ள அந்தேரி பகுதியில் பள்ளி ஒன்றில் ஒன்பதாவது படிக்கும் மாணவன் பள்ளி வளாகத்தில் புகை பிடித்துக் கொண்டிருந்தபோது அவனை ஆசிரியர் கையும் களவுமாக பிடித்தார். இதையடுத்து அந்தமாணவனிடம்  பேனா வடிவில் சிகரெட் போன்ற பொருள் இருப்பதை கவனித்த ஆசிரியர் அதுகுறித்து அவனிடம் விசாரித்துள்ளார்.

அதற்கு அந்த மாணவன், அதன்விலை 500 ரூபாய் என்றும் இதில் புகையிலையை நிரப்பிக் கொள்ள முடியும் என்றும் அவ்வப்போது இதில் புகையிலை  நிரப்பி சார்ஜ் செய்துகொள்ளவேண்டும் என்றும் தெரிவித்தான்.

பென் ஹூக்கா என்று அந்தப்பகுதியில் பிரபலமாக பேசப்படும் இந்த சிகரெட்டை ஒருமுறை புகைத்தால் ஒருமணி நேரம்வரை அதன் போதை இருக்கும் என்று கூறப்படுகிறது.

இது வழக்கமான சிகரெட்டை விட மிகவும் தீங்கானது என்றும் மூளை வளர்ச்சியை பாதிக்ககூடியது என்றும் குழந்தைகள் நல மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அந்தேரி பகுதியில் பேனா சிகரெட் கடைகளில் மிகச்சாதாரணமாக விற்கப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

இது பெற்றோர்களிடையே மிகவும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும், இந்தவகை சிகரெட்டுகளை உடனடியாக தடை செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளார்கள்.