சென்னை: தமிழகத்தில் பொதுமக்கள் கொரோனா பரவலை தடுக்கும் நோக்கில், முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம் வசூலிப்பது தொடர்பான மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

தமிழக சட்டப்பேரவையின் மழைக்காலக் கூட்டத்தொடரின் 2வது நாள்  கூட்டத்தொடர் இன்று நடைபெற்றது. கேள்வி நேரம் முடிந்ததும், பூஜ்யம் அவரில் நீட் கவன ஈர்ப்பு தீர்மானம் தொடர்பாக காரசார விவாதங்கள் நடைபெற்றன.

அதைத்தொடர்ந்து,  கொரோனா பாதிப்பால் தமிழக அரசின் செலவீனங்கள் குறித்த அறிக்கையை துணை முதல்வர் ஓபிஎஸ் தாக்கல் செய்தார்.

 அதனைத்தொடர்ந்து, அரசுப்பள்ளி மாணவர்களின் மருத்துவ படிப்புக்கான 7.5% உள்ஒதுக்கீடு சட்ட மசோதா சட்டப்பேரவையில் நிறைவேறியது.

தொடர்ந்து,  கொரோனா பரவலை தடுக்கும் நோக்கத்தில், மாஸ்க் அணியாதவர்களிடம் அபராதம் வசூலிப்பது தொடர்பாக சட்டமசோதா சட்டப்பேரவையில்  தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப் பட்டது. அதில், முக்கவசம் மட்டுமின்றி,  தனிமனித இடைவெளியை பின்பற்றாத நபர்களுக்கும் அபராதம் விதிக்க முடியும் வகையில் ஷரத்தக்கள் சேர்க்கப்பட்டள்ளன.

கடந்த 2 நாட்களில் மட்டுமே சென்னையில் கொரோனா விதிகளை பின்பற்றாதவர்களிடம் இருந்து ரூ.1.93 கோடி வசூலானது குறிப்பிடத்தக்கது.