6 மணி நேர கன மழையால் பெனாங்கில் வெள்ளம்!! பிரத்யேக புகைப்படங்கள்…

கோலாலம்பூர்:

மலேசியா நாட்டின் பெனாங் மாநிலத்தில் இன்று தொடர் மழை பெய்தது.

சுமார் 6 மணி நேரம் வரை தொடர்ந்து பெய்த இந்த மழையால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

சாலைகள் தோறும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் வாகனங்கள் வெள்ள நீரில் நீந்தியபடி செல்கின்றன.

வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள சேதம் என்ன என்பது உடனடியாக தெரியவில்லை.

ஆங்காங்கே வெள்ளத்தில் சிக்கி தத்தளிப்பவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது.