சபரிமலை நடை திறப்பு : நிலுவையில் உள்ள கட்டமைப்பு வசதிகள் – பகுதி 1

பரிமலை

ன்னும் ஒரு வாரத்துக்குள் சபரிமலை கோவில் நடை திறக்க உள்ள நேரத்தில் இங்குப் பல கட்டமைப்பு வேலைகள் பாக்கியில் உள்ளன.  இது குறித்த முதல் பகுதி இதோ.

வரும் கார்த்திகை மாதம் 1 ஆம் தேதி அதாவது நவம்பர் 16 முதல் சபரிமலையில் மண்டல பூஜை தொடங்குகிறது.  இந்த பூஜையை ஒட்டி வரும் டிசம்பர் மாதம் 27 ஆம் தேதி வரை நடை திறந்திருக்கும்.   அதன்பிறகு டிசம்பர் 30 ஆம் தேதி மீண்டும் மகரவிளக்கு முன்னிட்டு திறக்கப்பட உள்ளது.  இந்த மண்டல பூஜை நடை திறப்புக்கு முன்பு பல வசதிகள் பக்தர்களுக்கு அளிக்கப்படும் என திருவாங்கூர் தேவசம் போர்டு அறிவித்திருந்தது.

அது குறித்த விவரங்களின் முதல் பகுதி இதோ

உச்சநீதிமன்ற உத்தரவுக்கு இணங்க சென்ற வருடத்தில் இருந்து சபரிமலையில் தரிசனம் செய்ய அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.   அப்போது பலரும் பெண்களுக்கு எனத் தனி வரிசை இல்லை எனக் குறை கூறினர்.  குறிப்பாக இந்த வருடம் தமிழ்நாட்டில் இருந்து பல பெண்கள் வர உள்ளதாகவும் அவர்கள் தங்களுக்குத் தனி வரிசை அமைக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்து இருந்தனர்.

தற்போது அனைத்து தரிசனமும் ஆன்லைன் மூலம் முன்பதிவுசெயப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.   ஆனால்  பெண்களுக்கான வரிசைகள் எனத் தனியாக இது வரை அமைக்கப்படவில்லை.

பக்தர்களுக்குப் பல அடிப்படை வசதிகளும் இதுவரை  நிறைவேற்றபடாமல் உள்ளது.  குறிப்பாக பிளாஸ்டிக் பாட்டில் தடை காரணமாக பக்தர்கள் குடிநீர் எடுத்து வர முடியாத நிலை உள்ளது. அவர்களுக்குக் குடிநீர் வசதிகள் பம்பையிலிருந்து சபரிமலை வரை வரிசையாக அமைக்கப்படும் என கூறப்பட்டிருந்த  போதிலும் இதுவரை அதற்கான ஏற்பாடுகள் தொடங்கவில்லை

அடுத்த பகுதி விரைவில் தொடரும்.