கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில், புதுமுகம் ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்த பெண்குயின் படம் இன்று ஓடிடியில் வெளியானது.

படத்தை பார்த்தவர்கள் கீர்த்தி சுரேஷின் நடிப்பு நன்றாக இருக்கிறது. மற்றபடி படத்தில் சொல்லிக் கொள்ளும்படி ஒன்றும் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் பெண்குயின் படம் ஓடிடியில் ரிலீஸான வேகத்தில் அதை தமிழ் ராக்கர்ஸ் ஆட்கள் கசியிவிட்டுள்ளனர். பெண்குயின் படத்தை கசியவிட்ட தமிழ் ராக்கர்ஸ் மீது புகார் அளிக்க கார்த்திக் சுப்புராஜ் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த தகவல் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.