சென்னை: ஓய்வூதியதாரர்கள் 6 மாதத்திற்கு மேல் ஓய்வூதியத்தை அவர்களது வங்கி கணக்கில் இருந்து எடுக்க வில்லை என்றால், அவர்களின் ஓய்வூதியம் ரத்து செய்யப்படும் என்று தமிழகஅரசு அறிவித்து உள்ளது.

ஓய்வூதியம்  எடுக்காத நபர்களின் வங்கிக்கணக்கு விபரத்தை ஓய்வூதியம் வழங்கும் அமைப்புக்கு வங்கிகளே தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு உள்ளது.

இதுகுறித்து தமிழகஅரசு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது,  ஓய்வூதியதாரர்கள் 6 மாதத்திற்கு மேல் ஓய்வூதியத்தை அவர்களது வங்கி கணக்கில் இருந்து எடுக்க வில்லை என்றால், அவர்களின்  வங்கிக்கணக்கு விபரத்தை ஓய்வூதியம் வழங்கும் அமைப்புக்கு வங்கிகளே தெரிவிக்க வேண்டும் என்று கூறி உள்ளது.

தமிழக அரசின் இந்த அறிவிப்பு ஓய்வூதியதாரர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஒருவருடைய வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் ஊதியம் மற்றும் ஓவ்வூதியத்தை எடுப்பது அவர்களின் தேவையைப் பொறுத்தது. இதுதொடர்பாக எந்தவொருவிதியும் இல்லை. இந்த நிலையில், தமிழகஅரசு வெளியிட்டுள்ள இந்த திடீர் அறிவிப்பு ஓய்வூதியதாரர்களின் வயிற்றில் புளியை கரைத்துள்ளது.
வயதான காலத்தில், அவசர மருத்துவ தேவைக்காக வங்கியில் பலர் பணத்தை சேமித்து வருகின்றனர். ஆனால், அதிலும் வைக்க அரசு முனைந்திருப்பது கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.