சென்னை :

ட்டுமானத் தொழிலாளர்கள், உடல் உழைப்புத் தொழிலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு நல வாரியத்தில் பதிவுபெற்ற ஓய்வூதியதாரர்களுக்கு வாழ்க்கை சான்றிதழ் சமர்ப்பிக்க டிசம்பர் 31 வரை அவகாசம் வழங்கி தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.

இது குறித்து தமிழக அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை சார்பில் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது; 1-3-2020 முதல் 30-6-2020 க்குள் தங்களின் வாழ்க்கை சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டிய ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு ஏற்கனவே 31-8-2020 வரை அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், பேருந்துப் போக்குவரத்து மற்றும் பல்வேறு பொதுமுடக்க விதிமுறைகளால் வரமுடியாமல் போனதால் இவர்களுக்கு, 31-12-2020 க்குள் தங்கள் வாழ்வு சான்றிதழை சமர்ப்பிக்க கால அவகாசம் நீடித்து வழங்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடப் பட்டிருக்கிறது.

மேலும், கட்டுமானத் தொழிலாளர் நல வாரியம், உடல் உழைப்புத் தொழிலாளர் சமூக பாதுகாப்பு மற்றும் நல வாரியம் உள்ளிட்ட பல்வேறு வாரியச் செயலாளர்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று 1-3-2020 முதல் 31-12-2020 க்குள் வாழ்க்கை சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டிய ஓய்வூதியதாரர்கள் அனைவரின் நலனைக் கருத்தில் கொண்டு அரசு இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.