இந்த மதவாதி செய்யற வேலையைப் பாருங்க…! அதிர்ச்சி வீடியோ

கிறிஸ்தவ மதத்தின் ஒரு பிரிவாகச் சொல்லப்படும் பெந்தகோஸ்து என்பவர்கள், செய்யும் மதப்பிரச்சாரம் மிகப் பிரசித்தம். “ஏசப்பா.. ஏசப்பா.. “ என்று அவர்கள் மைக்கில் போடும் கூச்சலை அறியாதவர் இருக்க முடியாது.

அது போன்ற கூட்டங்களுக்கு வருபவர்களில சில பலருக்கு திடீரென “அருள்” (?) வந்து ஆடுவார்கள். ஆட்டம் பயங்கரமாக இருக்கும். அவர்களைப் பார்த்து மேலும் சில பலர் ஆடுவார்கள். “அலேலுயா அலேலுயா” என்ற கூவல் பலமாக இருக்கும். பார்ப்பவர்கள் பிரமித்து, புல்லரித்துப்போய் நிற்பார்கள்.

கூட்டத்தில் ஏன் அந்த சில பலருக்கு “அருள்” வருகிறது?

இதற்கான விடை கீழ்க்காணும் வீடியோவில் இருக்கிறது.

அலேலுயா”” மதவாதி, “எப்படி அருள் வந்து ஆட வேண்டும்” என்று இந சிலருக்கு டிரெய்னிங்க கொடுக்கும் வீடியோதான் இது.

பெண்கள் எப்படி கத்த வேண்டும், எப்படி ஆட (!) வேண்டும் என்றெல்லாம் கிளாஸ் எடுக்கிறார். ஒருவரைப் பிடித்து தள்ளிவிடுகிறார்.. அப்படித்தான் விழ வேண்டுமாம்!

“பெந்தகோஸ்தே சபையின் ஒரு பாதிரி, மக்களை ஏமாற்ற  நடத்தும் ஒத்திகையை பாருங்கள். புனிதமான கிறிஸ்துவ மதத்தை இழிவு படுத்துபவர்கள் இதுபோன்ற பாதிரிகள்தான்” என்ற குறிப்புடன் சமூகவலைதளங்களில் இந்த வீடியோ உலவுகிறது.

 

 

 

Leave a Reply

Your email address will not be published.