மீண்டும் உயரும் மொத்த விலைகள் : தவிப்பில் மக்கள்

டில்லி

டந்த இரு மாதங்களாக அத்தியாவசியப் பொருட்களின் மொத்த விலை எதிர்பார்த்தை விட அதிகரித்துள்ளது.

 

அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்கள், எரிபொருள் போன்றவை அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலில் உள்ளது.   இந்த பொருட்களின் மொத்த விலையைப் பொறுத்து சில்லறை விலையும் மாறுதல் அடையும்.    கடந்த சில மாதங்களாகவே மொத்த விலை உயர்ந்து வருகிறது.

கடந்த ஜனவரி மாதம் வரை ஓரளவு உயர்ந்து வந்த மொத்த விலை தற்போது ஜனவரி மாதம் 2.76% உயர்ந்தது.   அதை ஒட்டி பிப்ரவரி மாதம் இந்த உயர்வு 2.88% வரை உயரும் என எதிர்பார்க்கப்பட்டது.   ஆனால் அதை விட மேலும் உயர்ந்து பிப்ரவரி மாத உயர்வு 2.93% எட்டி உள்ளது.

இந்த மாதம் மேலும் உயர்ந்து 3.29% வரை எட்ட வாய்ப்புள்ளது.   சென்ற வருடம் விலை உயர்வு 1.84% ஆக இருந்தது.

நன்றி : REUTERS