சென்னையில் நேற்று வரை 26,194 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

18 ம் தேதி வரை 25,011 பேர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று ஒரே நாளில் 1,183 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த இரண்டாவது அலையில் 30 முதல் 39 வயது வரை உள்ளவர்கள் அதிகம் பாதிக்கப்படுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா பாதிப்பு குறித்த தரவுகளை ஆய்வு செய்யும் ஆர்வலரான விஜய் ஆனந்த் கடந்த ஆண்டு சென்னையில் இதேபோல் 25000 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நேரத்தில் வெளியிடப்பட்ட தரவுகளை தற்போது வெளியான தரவுகளுடன் ஒப்பிட்டு தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டிருக்கும் புள்ளிவிவரங்கள் படி :

7-ஜூலை-2020 அன்று வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்களை 18-4-2021 அன்று வெளியான புள்ளிவிவரத்துடன் ஒப்பிட்டு இந்த தகவலை அளித்துள்ளார்.

40 முதல் 79 வரை உள்ளவர்களுக்கு பாதிப்பு சற்று குறைந்திருப்பதாகவும்

0 – 19 வயது உள்ளவர்களுக்கு குறிப்பிட்டு சொல்லுமளவிற்கு குறைந்திருக்கிறது.

30 முதல் 39 வயது உள்ளவர்களுக்கு 2.6 சதவீத அளவு பாதிப்பு அதிகரித்துள்ளது தெரியவந்திருக்கிறது