க்னோ

ரசின் மீது மக்கள் கடும் கோபத்தில் உள்ளதாக ராஷ்டிரிய லோக் தள கட்சி தலைவர் அஜித் சிங் தெரிவித்துள்ளார்.

ராஷ்டிரிய லோக்தள கட்சி தலைவர் அஜித் சிங் தற்போது உ பி மாநில முசாஃபர்நகர் தொகுதியில் இருந்து போட்டி இட உள்ளதாக அறிவித்துள்ளார்.   முன்னாள் அமைச்சரான 80 வயதாகும் அஜித் சிங் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார்.   அப்போது அவர் செய்தியாளர்கள் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

அஜித் சிங் தனது பதிலில், “எனக்கு தற்போது தேர்தல் எவ்வளவு தேவை  என்பது முக்கியம் இல்லை.   நாட்டுக்கும் ஜனநாயகத்துக்கும் தேர்தல் தற்போது எவ்வளவு தேவை என்பதே முக்கியம் ஆகும்.   மக்கள் அரசியலமைப்பு சட்டத்தில் நம்பிக்கை இழந்தால் ஜனநாயம் இருக்காது.  எனவே இப்போதுள்ள ஆட்சியை விரட்டி ஜனநாயகத்தை காக்க தேர்தல் தேவை.

நான் வென்றாலும் இல்லை என்றாலும் தற்போதுள்ள நிலையில் சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் மற்றும் ராஷ்டிரிய லோக் தள கூட்டணி அவசியத் தேவை ஆகும்.   நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு இனத்தவரும் அரசின் மீது கடுமையான கோபத்தில் உள்ளனர்.

அவர்கள் விவசாயிகள், சிறுபான்மையினர், இளைஞர்கள், தலித்துகள் என பல இனங்களில் இருக்கலாம்.  ஆனால் கடந்த 5 வருடங்களாக அவர்கள் இந்த ஆட்சியால் கடுமையான துயரம் அனுபவித்துள்ளனர்.   ஒரு மாற்றத்தை விரும்பும் அவர்களுக்கு எங்கள் கூட்டணி அதை அளிக்கும்.

இந்த அரசு வாக்குறுதிகள் அளித்ததே தவிர அதை நிறைவேற்றவில்லை.  விவசாயிகளுக்கு விலை உயர்வு அளிக்கவில்லை.  வருடத்துக்கு 200 கோடி வேலைவாய்ப்புகள் ஏற்படுத்துவதாக சொல்லி பக்கோடா விற்க அரசு கூறியது.   கஙகை சுத்தீகரிப்பு என்றார்கள்.   கங்கை அப்படியெ உள்ளது.

கடந்த 2014 தேர்தல் முடிவு என்பது முசாஃபர்நகர் கலவரங்களால் பாதிப்பு அடைந்தது.   ஆகவே நான் முசாஃபர்நகர் மக்களுக்கு நீதி கிடைக்கவேண்டும் என்பதற்காக முசாஃபர் நகர் தொகுதியில் இருந்து இம்முறை போட்டியிட உள்ளேன்.     நான் பிஜேபியை வேரோடு சாய்க்க விரும்புகிறேன்.” என தெரிவித்துள்ளார்.