தராபாத்

தெலுங்கானா மாநில அரசு தனது சாதனைகள் குறித்த விளம்பர பானரில் ஐதராபாத் நகரை பாக்யநகரம் என குறிப்பிடப் பட்டதால் மக்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

நடந்து முடிந்த தெலுங்கானா மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவினர் தங்கள் தேர்தல் பிரசாரத்தில் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஐதராபாத் நகரத்தின் பெயர் அதன் பழைய பெயரான பாக்ய நகரம் என மாற்றப்படும் என அறிவித்தனர். இந்த அறிவிப்பை உத்திர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பல பொதுக் கூட்டங்களில் தெரிவித்தார். இந்த அறிவிப்பு அப்போது மக்களிடையே கரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தற்போது தெலுங்கானா அரசு மெட்ரோ உள்ளிட்ட அனைத்டு நலத் திட்டாங்களையும் குறித்து பானர்கள் மாநில தலைநகர் ஐதராபாத்தில் வைத்துள்ளன. அந்த பானர்களில் ஐதராபாத் நகரின் பெயர் பாக்யநகரம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் ஐதராபாத் மக்கள் கடும் குழப்பம் அடைந்துள்ளனர். தங்கள் நகரத்தின் பெயர் மாற்றம் குறித்து எவ்வித அறிவிப்பையும் அரசு வெளியிடவில்லை எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து சமூக ஆர்வலர்களும் எதிர்க்கட்சி தலைவர்களும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் தசோஜு ஸ்ரவண், “அதிகார பூர்வமாக இன்னும் நகரின் பெயர் ஐதராபாத் என இருக்கும் போது அரசின் விளம்பரத்தில் எவ்வாறு பாக்யநகரம் என குறிப்பிடபப்ட்டுளது. தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி பாஜகவின் கைப்பாவையாக செயல்பட்டு வருவது தற்போது தெளிவாகி உள்ளது. ஏற்கனவே பல மாநிலங்களில் சரித்திரப் புகழ் பெற்ற பெயர்களை பாஜக மாற்றி உள்ளது.” என தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஐதராபாத் நகர மெட்ரோ ரெயில் நிர்வாக இயக்குனர். “தெலுங்கு மொழியில் பாக்யநகரம் என்றால் செழிப்பான நகரம் என பொருளாகும். அதனால் அந்த பொருள் வரும்படி ஐதராபாத் நகரை அரசு குறிப்பிட்டு இருக்கிறது. தேவை இல்லாமல் அரசின் மீது சந்தேகம் கொள்ள வேண்டாம். நாம் அனைவருமே நமது நகரமான ஐதராபாத்தை மிகவும் விரும்புகிறோம்.” என கூறி உள்ளார்.