மக்களை மிகவும் கவர்ந்த காவல்துறையின் கருந்துளை விளம்பரம்
மும்பை
கருந்துளை புகைப்படத்தை வைத்து காவல்துறை செய்த விளம்பரம் மக்களை கவர்ந்துள்ளது.
கடந்த 10 ஆம் தேதி அன்று உலக வரலாற்றின் அதிசய நிகழ்வாக நாசா கருந்துளை புகைப்படத்தை வெளியிட்டது. இந்த செய்தி அறிவியல் துறையை சார்ந்தோரை மட்டுமின்றி உலகில் உள்ள அனைவரையும் வியப்பைல் ஆழ்த்தியது. பலரும் இந்த புகைப்படங்களை சமூக வலை தளங்களில் பதிந்தனர்.
அவ்வகையில் மும்பை காவல்துறையும் இந்த புகைபடத்தை ஒரு செய்தியுடன் தனது டிவிட்டரில் பதிந்தது. நாசா புகைப்படம் உலகெங்கும் பரவியது போல் இந்த செய்தியும் பல இந்தியர்களால் பகிரப்பட்டது. இந்த பதிவு வெளியான அன்றே சுமார் 3000 விருப்பங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை 750 க்கும்மேற்பட்டவர்கள் அன்றே மறு பதிவு செய்துள்ளனர்.
Don't be 'pulled' into making a 'gargantuan' mistake! #SayNoToDrugs pic.twitter.com/GzrVqAXXIt
— Mumbai Police (@MumbaiPolice) April 11, 2019
அந்த பதிவில், “மிகப் பெரிய தவறு செய்து கருந்துளைக்குள் இழுக்கப்படாதீர்கள். போதை மருந்துகளை புறக்கணியுங்கள்.” என பதியப்பட்டுள்ளது அந்த படத்தி உள்ள வெள்ளை கோடு போதை மருந்து உபயோகத்தையும் அந்த கருந்துளை உயிரிழப்பையும் குறிக்கும் வண்ணம் அந்த பதிவை மும்பை காவல்துறை அமைத்துள்ளதை அனைவரும் புகழ்ந்துள்ளனர்.