டில்லி

பெட்ரோல் விலை மீண்டும் உயர்வடைந்து இன்று புதிய உச்சத்தை தொட்டதால் மக்கள் கவலை அடைந்துள்ளனர்.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தினசரி பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றி அமைக்கப்படுகின்றன.    கொரோனா கால கட்டத்தில் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடும் வீழ்ச்சி அடைந்த போதிலும் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைக்கப்படவில்லை.

மாறாக மத்திய பாஜக அரசு பெட்ரோல் மற்றும் டீசலுக்கான ஆயத் தீர்வையை உயர்த்தியதால் விலை சிறிதும் மாற்றமின்றி விலை உயர்ந்து காணப்பட்டது.   அதன் பிறகு மீண்டும் விலை உயர்ந்தது.  கடந்த சில வாரங்களாக பெட்ரோல் மற்றும் டீசல்  விலை உயராமல் ஒரே இடத்தில் இருந்தது.

மீண்டும் தற்போது பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரத் தொடங்கி உள்ளது.  இன்று பெட்ரோல் விலை டில்லியில் லிட்டருக்கு ரூ.84.95 எனவும் மும்பையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.91.56 எனவும் உயர்ந்தது.  இது இதுவரை வரலாறு காணாத விலை உயர்வு என்பதால் மக்கள் பெரிதும் கவலை அடைந்துள்ளனர்.