போலீஸ்காரர் விரலை கடித்து குதறிய வழிப்பறி திருடன்….பொதுமக்கள் சுற்றிவளைப்பு

--

சென்னை:

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் மாணவர் ஒருவரது கைப்பையை ஒரு வழிப்பறி திருடன் பறித்துக் கொண்டு தப்பி ஓடினான். மாணவரின் அலறல் சத்தம் கேட்டு பொதுமக்களும், போலீசாரும் அந்த நபரை விரட்டி சென்றனர்.

இதில் கார்த்திக் என்ற போலீஸ்காரர் அந்த நபரை விரட்டி பிடித்தார். அப்போது சற்றும் எதிர்பாராத வகையில் கார்த்திக் கை விரலை வழிப்பறி திருடன் கடித்து துண்டாக்கினான்.

இதனால் கார்த்திக்கின் கையில் இருந்து ரத்தம் கொட்டியது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தப்பி ஓட முயன்ற திருடனை மக்கள் சுற்றிவளைத்து பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். காயமடைந்த போலீஸ்காரர் மருத்துவமனையில் சேக்கப்பட்டுள்ளார்.

You may have missed