பாரத் மாதா கீ ஜே என்று சொல்பவர்கள் மட்டும் இந்தியாவில் இருக்கலாம்: இமாச்சல பிரதேச முதல்வர் சர்ச்சை பேட்டி

சிம்லா: பாரத் மாதா கீ ஜே என்று சொல்பவர்கள் மட்டும் இந்தியாவில் இருக்கலாம் என்று இமாச்சல பிரதேச முதலமைச்சர் ஜெய்ராம் தாக்கூர் பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

டெல்லியில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராகவும் ஆதரவாகவும் நடைபெறும் போராட்டம் வன்முறையாக மாறி வருகிறது. கர்தம்பூரி, சந்த் பாக், தயால்பூர் உள்ளிட்ட வடகிழக்கு டெல்லி போர்க்களமாகி உள்ளது.

ஏராளமான பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வன்முறையில் கர்தம்பூரி தலைமைக் காவலர் ரத்தன் லால், ஜாப்ராபாத் முகமது சுல்தான், ஷாஹித் ஆல்வி உள்ளிட்ட 23 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் பலர் கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என்று தெரிய வருகிறது. 200க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனிடையே இந்த  வன்முறை சம்பவங்கள் குறித்த கேள்விக்கு பதிலளித்த இமாச்சல பிரதேச முதலமைச்சர் ஜெய்ராம் தாக்கூர், பாரத் மாதா கீ ஜே என்று சொல்பவர்கள் மட்டுமே இங்கு இருக்கலாம்.

பாரதத்தை எதிர்ப்பவர்கள், அரசியல் சாசனத்தை அவமதிப்பவர்கள் ஆகியவர்களை சமாளிப்பதற்கான நேரம் வந்திருக்கிறது. டெல்லி வன்முறையை அமைதிப்படுத்தும் நடவடிக்கைகளில் உள்துறை அமைச்சர் அமித் ஷா இறங்கி இருக்கிறார்.விரைவில் அனைத்தும் சீராகும் என்றார்.

கார்ட்டூன் கேலரி