டில்லி

பிரதமர் சோனியா மற்றும் ராஜிவ் காந்தியை பிரதமர் மோடி தொடர்ந்து இழிவாக பேசி வருவதற்கு சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மோடி தனது தேர்தல் பரப்புரையில், தொடர்ந்து முன்னாள் காங்கிரஸ் தலைவர்கள் ராஜிவ் காந்தி மற்றும் சோனியா காந்தியை தரக்குறைவாக பேசி வருகிறார். உத்திரப் பிரதேசத்தில் ஒரு கூட்டத்தில் அவர் சோனியா காந்தியை விதவை எனக் கூறி தாக்கினார். அதற்கு முன்பே பாஜகவினர் ராகுல் காந்தியை தொடர்ந்து சிறுவன் எனக் கூறி வருகின்றனர்.

மோடி தனது உரையில், “உங்களுக்கு தெரியுமா? காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் ஒரு பெண் குழந்தை பிறக்காமலே பிறந்ததாக காட்டப்பட்டது. ஆனால் அந்த குழந்தை இறந்ததாக கூறப்பட்டு அதன் விதவை உதவித் தொகையை வேறொருவருக்கு வழங்கப்பட்டது. அந்த தொகையை எந்த விதவை வாங்கினார்? காங்கிரஸ் கட்சியில் இருந்த அந்த விதவையின் வங்கிக் கனக்கில் இந்த உதவித் தொகை அளிக்கப்பட்டுள்ளதா?” என பேசி உள்ளார்.

நேற்று ஒரு தேர்தல் கூட்டத்தில் பேசிய மோடி, “என்னை குற்றவாளி என காட்ட பல பொய் புகார்களை காங்கிரஸ் தொடர்ந்து கூறி வருகிறது. காங்கிரஸ் தலைவர்களை குற்றமற்றவரகள் என காட்ட இவ்வாறு கூறுகின்றது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் தந்தை ராஜிவ் காந்தி அவர் கட்சியினரால் குற்றமற்றவர் என புகழப்பட்டார். ஆனால் அவர் ஒன்றாம் நம்பர் ஊழல் பேர்வழியாக மரணம் அடைந்தார்” என பேசி உள்ளார்.

இதற்கு மக்களில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். நெட்டிசன்கள் பலர் தங்களின் பதிவில் இறந்த மனிதரைப் பற்றி கேவலமாக தெரிவிப்பதையும் கணவனை இழந்தவர் என்பதால் சோனியா வை தவறாக பேசுவதையும் கடுமையாக கண்டித்துள்ளனர்.

ஒருவர் தனது பதிவில், “நான் சொல்வது தவறென்றால் என்னை திருத்துங்கள். பாஜகவில் யாரும் இதுவரை ராஜிவ் காந்தியை பற்றி இவ்வளவு கேவலமாக பேசியதில்லை என எண்ணுகிறேன். ஆம். சோனியா காந்தியையும் ராகுல் காந்தியையும் அவர் தாக்கி உள்ளார். இது போல வர்த்தைகளை வாஜ்பாய், அத்வானி, சுஷ்மா, முரளி மனோகர், ராஜ்நாட் உல்ள்ளிட்ட யாரும் பேசி தங்கள் எல்லையை தாண்டியதில்லை” என தெரிவித்துள்ளார்.