3வது நாளாக தொடரும் சிஏஏக்கு எதிரான சென்னை வண்ணாரப்பேட்டை போராட்டம்! பொதுமக்கள் புலம்பல்

சென்னை:

சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியில் நேற்று முன்தினம் சிஏஏக்கு எதிரான போராட்டத்தின்போது தடியடி நடைபெற்றதைத் தொடர்ந்து போராட்டம் இன்று 3வது நாளாக தொடர்கிறது.

மத்தியஅரசு கொண்டு வந்துள்ள சிஏஏ சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. தமிழகத்திலும் இஸ்லாமிய அமைப்புகள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியில் நேற்று முன்தினம் முதல் போராட்டம் தொடர்ந்து வருகிறது. இன்று 3வது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது.

இஸ்லாமியர்களின் போராட்டம் காரணமாக, அந்த பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது. மேலும் போராட்டம் நடைபெறும் பகுதிகளில் உள்ள பொதுமக்கள் தங்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளதாக குற்றம் சாட்டி வருகின்றனர். தங்களால் வெளி இடங்களுக்கு செல்ல முடியாமல் கடுமையான துயரங்களுக்கு ஆளாகி வருவதாக குற்றம் சாட்டி உள்ளனர்.

பொதுவாக ஞாயிற்றுக்கிழமைகளில் வண்ணாரப்பேட்டை பகுதிகளில் துணி வியாபாரம் ஜோராக இருக்கும். ஆனால், கடந்த இரண்டு நாட்களாக தொடரும் போராட்டம் காரணமாக, பொதுமக்கள் வண்ணாரப்பேட்டை பகுதிகளுக்கு வருவதை நிறுத்தி உள்ளனர். இதன் காரணமாக  பல வியாபரிகள் கடைகள் திறப்தை தவிர்த்து வருவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்து உள்ளனர்.

இந்த போராட்டத்தை உடனே முடிவு கொண்டுவர வேண்டும் என்று மாநில அரசுக்கு அந்த பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இஸ்லாமியர்களின்  போராட்டம் காரணமாக வடசென்னையின்  பல இடங்களில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு உள்ளது. மேலும் பல முக்கிய பகுதிகளில்  காவல்துறையினரும் அதிக அளவில் குவிக்கப்பட்டு உள்ளதால் பரபரப்பாகவே காணப்படுகிறது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: chennai, People continue to hold protest against the Citizenship Amendment Act (CAA) and National Register of Citizens (NRC) at Old Washermanpet
-=-