அண்ணா அறிவாலயம்: கருணாநிதி சிலையை காண அலைமோதும் மக்கள் கூட்டம்!

சென்னை:

றைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதியின் முழு உருவச்சிலை அண்ணா அறிவாலயத்தில் நேற்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியால் திறந்து வைக்கப்பட்டது.

இந்த சிலையை காண இன்று காலை முதலே,  திமுக தொண்டர்கள் உள்பட பொதுமக்கள் சாரை சாரையாக வந்து கண்டு களித்து வருகின்றனர். இதன் காரணமாக அண்ணா அறிவாலயம் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது.

மறைந்த திமுக தலைவருக்கு முழுஉருவ வெண்கலச் சிலை வடிவமைக்கப்பட்டு, அண்ண அறிவாலயத்தில் நேற்று திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சோனியாகாந்தி உள்பட எதிர்க்கட்சி தலைவர்கள், மாநில முதல்வர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில்,  அண்ணா அறிவாலயத்தில் நிறுவப்பட்டுள்ள கருணாநிதி சிலையை காண தமிழ்நாட்டில் பல இடங்களில் இருந்து திமுக தொண்டர்கள் வாகனங்களில் வருகை தந்துள்ளனர்.

அங்குள்ள கலைஞர் சிலையுடன் புகைப்படம் எடுத்தும், செல்பி எடுத்தும் தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்து வருகின்றனர்.