திருவனந்தபுரம்:

இடதுசாரிகளில் கோட்டை என கருதப்படும் ஆலத்தூர் மக்களவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக ரெம்யா ஹரிதாஸை ராகுல்காந்தி வேட்பாளராக நிறுத்தியுள்ளார். இவர் வெற்றி பெற்றால், கேரளாவின் முதல் தலித் பெண் எம்பி என்ற பெருமையை பெறுவார்.


ரெமியா ஹரிதாஸ் அப்பா சாதாரண தினக்கூலி. சிறிய வீட்டில் வாழும் இவர் குண்ணமங்கலம் பஞ்சாயத்து தலைவராக இருக்கிறார்.
ஆலத்தூர் மக்களவை தொகுதியில் தொடர்ந்து வெற்றிபெற்று வரும் பிகே.பிஜுவை எதிர்த்து ரெமியா ஹரிதாஸை வேட்பாளராக நிறுத்தியுள்ளார் ராகுல்காந்தி.

ஆலத்தூர் இடதுசாரிகளின் கோட்டையாக கருதப்படுகிறது. ரெமியா ஹரிதாஸின் மக்கள் சேவை மற்றும் கட்சியில் அவருக்கு இருக்கும் ஈடுபாட்டின் அடிப்படையில், ராகுல்காந்தியே ரெமியா ஹரிதாஸை வேட்பாளராக அறிவித்துள்ளார்.

தாம் ஆலத்தூர் மக்களவை தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளதாக, தொலைக்காட்சியில் செய்தி போய்க் கொண்டிருப்பதை தன் தோழி சொல்லித்தான் ரெமியாவுக்கே தெரிந்திருக்கிறது.

ஆலத்தூர் தொகுதியில் ரெமியா வெற்றி பெற்றால், முதல் தலித் பெண் எம்பி என்ற பெருமையைப் பெறுவார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற மத்திய,மாநில அரசுகள் தவறிவிட்டன.
காங்கிரஸ் கட்சியின் இளைஞர் பிரிவில் பல பொறுப்புகளில் இருந்துள்ளேன். இளைஞர்களுக்காக நல்லது செய்ய காங்கிரஸால் மட்டுமே முடியும்”என்றார்.