டில்லி,

த்திய பட்ஜெட் இன்று காலை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. நிதி அமைச்சர் அருண்ஜேட்லி நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்தார்.

மத்திய அரசு  பணமதிப்பிழப்பு கொண்டுவந்த பிறகு பொதுமக்கள் பணத்திற்கு திண்டாடி வருகின்றனர். இன்னும் பணப்புழக்கம் சீரடையாமல் அவதிப்படுகின்றனர்.

இந்நிலையில் இன்று தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் நடுத்தர மக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் வருமான வரி விலக்கு உச்சவரம்பு மாற்றம் செய்யும் என்று பெரிதும் எதிர்பார்த்தனர்.

ஆனால், அருண்ஜேட்லி இன்று தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில் வருமான வரி விலக்கு உச்சவரம்பில் எந்தவித மாற்றமும் செய்யவில்லை. மாறாக,  ரூ.5 லட்சம் வரையில் வரி பாதியாக குறைப்பு பட்டும் செய்யப்பட்டுள்ளது.

 

தனிநபருக்கான வருமான வரி விலக்கு உச்சவரம்பு இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் என்பதில் மாற்றம் இல்லை.

ஆனால், ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்திற்கான வரி 10 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

ரூ.50 லட்சம் முதல் 1 கோடி ரூபாயிலான வருவாய்க்கு 10 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்படு கிறது.

1 கோடி ரூபாய்க்கு மேல் உள்ள வருமானத்திற்கு 15 சதவீதம் கூடுதல் வரி விதிப்பு தொடரும்.

மத்திய அரசின் இந்த அறிவிப்பு மக்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.