பாஜகவின் தோல்விக்கு காரணம் என்ன? நல்லக்கண்ணு தகவல்

மதுரை

ந்து மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாஜக தோல்வி அடைந்தது குறித்து கம்யூனிஸ்ட் தலைவர் நல்லக்கண்ணு கருத்து தெரிவித்துள்ளார்.

கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு. தற்போது சுமார் 92 வயதாகும் இவர் தனது 15ஆம் வயதில் இருந்து அரசியலில் ஈடுபட்டுள்ளார். பல கம்யூனிச புத்தகங்களையும் இவர் எழுதி உள்ளார். நல்லக்கண்ணு நேற்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் செய்தியாளர்கள் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

நல்லக்கண்ணு தனது பதிலில், “நடந்து முடிந்த தேர்தலில் பாஜக தோல்வி அடைந்ததற்கு பிரதமர் மோடியின் பொருளாதார நடவடிக்கைகளே காரணம் ஆகும். ஏற்கனவே 3 மாநிலத் தேர்தல்களில் தோல்வி அடைந்ததை பாஜக ஒரு பாடமாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆகவே தற்போது மீண்டும் பாஜக தோல்வி அடைந்துள்ளது.

மோடியை பொறுத்தவரை அவர் கார்ப்பொரேட் நிறுவனங்களுக்கு மட்டுமே சலுகை அளித்து வருகிறார். அவருடைய இத்தகைய நடவடிக்கைகள் மக்களுக்கு சிறிதும் பிடிக்கவில்லை. பாஜக தோல்வி அடைய இதுவே முக்கிய காரணம்” என தெரிவித்துள்ளார்.