Random image

ஐதராபாத்தில் 57அடி உயர விநாயகருக்கு 600கிலோ எடையிலான லட்டு பிரசாதம்

ஐதராபாத்:

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, தெலுங்கானா மாநிலத்தில் 57 அடி உயரமுள்ள மெகா பிள்ளையார் வைக்கப்பட்டுள்ளது. அவருக்கு  600 கிலோ மெகா லட்டு காணிக்கையாக வைக்கப்பட்டுள்ளது.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்திலுள்ள கரிதாபாத் பகுதியில் ஆண்டு தோறும்  மாபெரும் விநாயகர் சிலை வைக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு 57 ஆடி உயரமும், 24 ஆடி அகலமும் உள்ள சிலை வைக்கப்பட்டுள்ளது.

இந்த மெகா பிள்ளையாருக்கு 600 கிலோ எடை உள்ள மெகா லட்டு காணிக்கையாக வைக்கப்பட்டுள்ளது.

இந்த மெகா லட்டு ஆந்திராவிலுள்ள தப்பேஸ்வரம் கிராமத்திலிருந்து தயார் செய்யப்பட்டு ஐதராபாத்துக்கு நேற்று கொண்டுவரபட்டது. இன்று விநாயகர் சதுர்த்தியையொட்டி பிள்ளையாருக்கு படைக்கப்பட்டுள்ளது.  இந்த லட்டு பிரசாதம் பக்தர்களுக்குபிரசாதமாக வழங்கப்பட உள்ளது.

இந்த மெகா பிள்ளையாரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசித்து வருகின்றனர்.