“மக்கள் ஆளுநர்” : அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன் புகழாரம் …”

தஞ்சாவூர்,

மிழக ஆளுநர் பன்வாரிலால் மாவட்டம் வாரியாக சென்று அதிகாரிகளையும், பொதுமக்களையும் சந்தித்து குறைகள் கேட்டறிந்தும், ஆய்வு நடத்தியும் வருகிறார்.

எம்ஜிஆர். சிலையை திறந்து வைத்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் மா.பா.பாண்டியராஜன், ஆளுநருக்கு புகழாரம் சூட்டினார். அப்போது, ஆரஞ்சு விளையும் நாக்பூரில் இருந்து தஞ்சைக்கு வந்துள்ள மக்கள் ஆளுநர் அவர்களே” என்று பேசியது, விழாவில் இருந்த அதிகாரிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள், பொதுமக்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

ஆளுநரின் ஆய்வுக்கு  தமிழக எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தும், கருப்புகொடி காட்டி போராட்டமும் நடத்தி வருகின்றன.

இந்நிலையில்,  தஞ்சாவூர் வந்த பன்வாரிலாலுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக சார்பாக டி.ஆர்.பாலு தலைமையில் கருப்பு கொடி காட்டப்பட்டது.

இந்நிலையில், நேற்று தஞ்சாவூர் வந்த ஆளுநர் பன்வாரிலால்,  மாலை தஞ்சாவூர் தென்னகப் பண்பாட்டு மையத்தில் நடைபெற்றுவந்த சலங்கை நாதம் கலை விழாவின் நிறைவு விழாவில் கலந்துகொண்ட ஆளுநர், இன்று  காலை 6.30 மணியளவில் தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலுக்குச் சென்றார்.

அதைத்தொடர்ந்து  காலை 10.30 மணியளவில் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில்  மறைந்த முதல்வர் எம்ஜிஆரின் மார்பளவு உருவச் சிலையை திறந்து வைத்தார். அதையடுத்து பேசிய தமிழக அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் ஆளுநர் பன்வாரிலாலுக்கு புகழாரம் சூட்டினார்.

அவர் பேசும்போது,  ஆரஞ்சு விளையும் நாக்பூரில் இருந்து தஞ்சைக்கு வந்துள்ள மக்கள் ஆளுநர் அவர்களே” என்று விளித்து பேசினார். இது கட்சிகாரர்களுக்கே அதிர்ச்சியைகவும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது.

ஆளுநரின் மக்கள் சந்திப்புக்கு அனைத்து கட்சியினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அமைச்சரின் அளவுகடந்த புகழாரம் அங்கிருந்த மக்களிடையேயும் முனுமுனுப்பை ஏற்படுத்தியது.

நிகழ்ச்சியை முடிந்ததும் ஆளுநர்  தொடர்ந்து அரண்மனை வளாகத்தில் உள்ள  புகழ் பெற்ற சரஸ்வதி மகால் நூலகத்தைப் பார்வையிடுகிறார்.

அதைத்தொடர்ந்து மாலை 3.30 மணி முதல் 5 மணி வரை பொதுப்பணித் துறை சுற்றுலா மாளிகையில் மக்கள் பிரதிநிதிகள், தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள், அரசியல் கட்சிப் பிரமுகர்கள் மற்றும் பொது நல அமைப்புகளின் பிரதிநிதிகளை நேரில் சந்திக்கிறார்.

ஆளுநரைச் சந்திக்க விருப்பம் உள்ளவர்கள் அந்த நேரத்தில் சந்தித்து மனுக்களை அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

அதைத்தொடர்ந்து, மாலை 6 மணிக்கு திருவையாறில் நடைபெறும் தியாகராஜரின் 171-வது ஆராதனை விழாவைத் தொடங்கி வைத்து ஆளுநர் பன்வாரிலால் சிறப்புரையாற்றுகிறார்