அரசை அதிகம் நம்பும் மக்கள்: இந்தியாவுக்கு எத்தனையாவது இடம் தெரியுமா?

டில்லி :

ரசு மீது அதிக நம்பிக்கை கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 3வது இடத்தில் உள்ளது. இந்த தகவலை டாவோசில் உலக நம்பிக்கை கழகம் தெரிவித்துள்ளது.

கடந்த 2017ம் ஆண்டுக்கான ஆய்வு  அறிக்கையை டாவோசில் வெளியிட்டுள்ளது. இதில் 28 நாடுகள் ஆய்வு செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளது.  அதன்படி, இந்தியாவில், பண மதிப்பிழப்பு, சேவை சரக்குவரி (ஜிஎஸ்டி) போன்றவை அமல்பட்டும், பிரதமர் மோடி மீது மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்த டாவோசில் ஆய்வு அறிக்கைபடி, ஆளும் அரசுமீது மக்கள்  அதிக நம்பிக்கை உள்ள நாடுகளின் பட்டியலில் சீனா முதலிடத்தில் உள்ளது. அதையடுத்து 2வது இடத்தில் இந்தோனேசியா உள்ளது கடந்த 2016ம் ஆண்டு முதலிடத்தில் இருந்த  இந்தியா 2017ம் ஆண்டில் பின்னுக்கு தள்ளப்பட்டு, தற்போது  3வது இடத்தில் உள்ளது.

கடந்த ஆண்டு பின்னால் இருந்த சீனா, இந்த ஆண்டு முதலிடத்திற்கும் அதே சமயம் அமெரிக்காவும் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

கார்ட்டூன் கேலரி