லக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பல நாடுகள் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி மக்களை வீட்டுக்குள்ளேயே அடைந்து இருக்க வலியுறுத்தி வருகிறது.

ஒருபுறம் வெறிச்சோடி காணப்படும் துபாய் சாலைகள்

இந்தியாவிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், பல இடங்களில் பொதுமக்கள், கொரோனா வைரசால் ஏற்படும் பாதிப்பை பற்றி கவலைப்படாமல், சட்டத்தையும் மதிக்காமல் ஊர் சுற்றி வருகின்றனர். இதுபோன்ற செயல்கள் இந்தியாவில்தான் நடைபெறுகிறது என்று நினைத்தால், அபுதாபியிலும் இதேபோன்றே நிலைதான் ஏற்பட்டுள்ளது.

எப்போதும் பரபரப்பாக இயங்கும் துபாய் நாட்டிலும் கொரோனா நோய் கிருமிகளை ஒழிப்பதற்காக, மூன்று நாட்கள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. மக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

மேலும்,  ஊரடங்கை மீறினால் இந்திய மதிப்பில்  பத்து லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது. நேற்று (27ந்தேதி) இரவு 8 மணிமுதல் துபாய் முழுவதும் இந்த ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்ததுள்ளது. இதனால் நாட்டின் பல பகுதிகள்   போக்குவரத்து இன்றி வெறிச்சோடிய காணப்படுகிறது.

மற்றொருபுறம் கடைகளின் முன்பு அணிவகுத்து நிற்கும் கார்கள்… மக்கள்

இருந்தாலும் சில இடங்களில் பொதுமக்கள் வெளியே சுற்றிக்கொண்டுதான் இருக்கிறார்கள். தங்களுக்கு தேவையானவற்றை வாங்க வெளியே வந்திருப்பதாக கூறிக்கொண்டு கடைகளை நோக்கி படையெடுத்து வருகிறார்கள்.