ஓ என் ஜி சி எண்ணெய் குழாய் கசிவு : மக்கள் பீதி

திராமங்கலம்

திராமங்கலம் கிராமத்தில் ஒ என் ஜி சி அமைத்துள்ள எண்ணெய்க் குழாயில் கசிவு ஏற்பட்டுள்ளது

கதிராமங்கலம் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளது.  இங்கு ஓ என் ஜி சி நிறுவனத்தின் எண்ணெய் கிணறுகள் அமைந்துள்ளன.   அதிலிருந்து குழாய்கள் வழியாக கச்சா எண்ணெய் கொண்டு செல்லப்படுகிறது   அந்த எண்ணெய் கிணறுகளின் பராமரிப்பு, மற்றும் புதிய குழாய்கள் பதிப்பு,  ஆகியவற்றுக்காக பல இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

இதனால் அச்சமடைந்த உள்ளூர் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் பாதிப்பு அதிகரிக்கும் எனவும் கவலை தெரிவித்துள்ளனர்.

இன்று ஓ என் ஜி சி பதிந்துள்ள எண்ணெய் குழாயில் இருந்து எண்ணெய் கசிவு ஏற்பட ஆரம்பித்துள்ளது.  அந்த குழாய்களில் இருந்து லேசாக புகையும் கசிந்ததால் பொதுமக்கள் பீதி அடைந்தனர்.

ஓ என் ஜி சி பொறியாளர்கள் குழாயை சரி செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.  விரைவில் கசிவு சரி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது

You may have missed